ஜனாதிபேதி தேர்தல் 2019: இதுவரை 35 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்!

எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரையில் 35 வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

சிறிதுங்க ஜயசூரிய, பத்தரமுல்லை சீலரதன தேரர், ஜயந்த கெடகொட, எ.எஸ்.பி.லியனகே ஆகியோர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

அதேபோல, அனுருத்த பொல்கம்பல, எம்.கே.சிவாஜிலிங்கம், அசோக வடிகமன்காவ, வஜரபானி சிறிவர்தன ஆகியோரும் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்களை இதுவரையில் தாக்கல் செய்துள்ளனர்.

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான அனுர குமார திசாநாயக்கவும் தற்போது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மற்றும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்யும் தேர்தல்கள் காரியாலயத்துக்கு வருகை தந்துள்ளனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்