சஜித்துக்கு இன்று அமோக வரவேற்பு – இராஜகிரியவில் திரண்டது மக்கள் வெள்ளம்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ, இராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்துவிட்டு வெளியே வந்தபோது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் அணிதிரண்டு அவரை வரவேற்றனர்.

வேட்புமனுவைத் தாக்கல் செய்ய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குள் சஜித் பிரேமதாஸ நுழைந்தபோதே அவரின் ஆதரவாளர்கள் வெளியில் குவியத் தொடங்கினர். ஐ.தே.க. தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் அரசியல் பிரமுகர்களும் அங்கு படையெடுத்திருந்தனர்.

வேட்புமனுத் தாக்கலின் பின்னர் சஜித் பிரேமதாஸ வெளியே வந்தபோது அங்கு திரண்டிருந்த ஆதரவாளர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.

இதன்போது சஜித் பிரேமதாஸ அங்கு நின்ற அனைவரையும் பார்த்து கையசைத்து நன்றிகளைத் தெரிவித்தார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்