கொழும்பில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

கொழும்பு – ஜம்பட்டா வீதியில் சற்று முன்னர் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்களில் வந்த ஒருவரே இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, இந்த சம்பவத்தை அடுத்து அந்த பகுதியில் சற்று பதற்றம் நிலவுவதாகவும் அறியமுடிகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்