விடுதலைப் புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட தொப்பியுடன் வவுனியாவில் இளைஞன் கைது

விடுதலைப் புலிகளின் இலச்சனை பொறிக்கப்பட்ட தொப்பி மற்றும் சின்னம் என்பவற்றுடன் இளைஞன் ஒருவர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (08.10) மாலை வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் பொலிசார் மேற்கொண்ட வழமையான திடீர் சோதனை நடவடிக்கையின் போது குறித்த இளைஞன் விடுதலைப் புலிகளின் இலச்சனை பொறிக்கப்பட்ட தொப்பி மற்றும் இலச்சனை பொறிக்கப்பட்ட சின்னம் என்பன உடமையில் வைத்திருந்ததாக குறித்த இளைஞன் கைது செயயப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் தொடர்பில் வவுனியா பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். குறித்த இளைஞன் சுமார் 25 வயது மதிக்கத்தக்க யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையை சேர்ந்தவர்என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்