நாட்டுக்கு குடும்ப தலைமைத்துவம் தேவையில்லை – சுனில் ஹந்துன்நெத்தி!

நாட்டுக்கு தலைவர் ஒருவர் தேவை. ஆனால் குடும்ப தலைமைத்துவம் தேவையில்லை என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

ஹொரணை, மொறகஹஹேன பகுதியில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஏன் வேட்பாளரை பெயரிடவில்லை என கேள்வி எழுப்பிய அவர், அந்த கட்சி தற்போது பலமிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு மஹிந்த தரப்பு தேர்தலில் களமிறங்கியுள்ளமையும் இதற்கு ஒரு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கு தலைவர் ஒருவர் தேவை எனவும் ஆனால் குடும்ப தலைமைத்துவம் தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் அநுர குமார திசாநாயக்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்யுமாறும் அவர் இதன்போது கேட்டுக்கொண்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்