சஜித், கோட்டாவிற்கு எதிராக எந்தவொரு சட்ட ரீதியான நடவடிக்கையையும் எடுக்கவில்லை – ஐ.தே.க!

சஜித் பிரேமதாச, கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக எந்தவொரு சட்ட ரீதியான நடவடிக்கையையும் எடுக்கவில்லை என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

கண்டியில் நேற்று(செவ்வாய்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் சுஜீவ சேனசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களின் தெரிவிக்கும் பல்வேறு கருத்துக்கள் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பலமடைகின்றார்.

ஜனாதிபதியை கடந்த சில தினங்களுக்கு முன்னர் சந்தித்தோம். இதன் போது பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளிப்பது குறித்து தெரிவிக்கவில்லை.

எந்தவித குற்றச்சாட்டுகளும் இல்லாத சுத்தமான கைகளை உடையவரே நாட்டை ஆள வேண்டும் என்பதே ஜனாதிபதியின் நிலைப்பாடு.

நிச்சயமாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவளிப்பர் என ஜனாதிபதி கூறினார். எனினும் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஒருசில அரசியல் தீர்மானங்களால் இவ்வாறான கருத்துக்கள் வெளியிடபடலாம். நாடாளுமன்ற உறுப்பினர்கள் 7 அல்லது 8 பேர் ஐக்கிய தேசியக் கட்சியிவுடன் இணைய பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளனர்.

எனவே சிறப்பான விளையாட்டுகளை எதிர்காலத்தில் பார்கக முடியும்’ என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்