போரதீவுப் பற்று பிரதேச உளநல சமூக சம்மேளனம் அங்குரார்ப்பணம்…

போரதீவுப் பற்று பிரதேச உளநல சமூக சம்மேளனம் அங்குரார்ப்பணம்…

போரதீவுப் பற்று பிரதேச செயலக மட்ட உளநல சமூக சம்மேளனம் அங்குரார்ப்பண நிகழ்வு இன்றைய தினம் போராதீவுப் பற்றுப் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் செல்வி ஆர்.இராகுலநாயகி தலைமையில் இடம்பெற்றது.

சர்வதேச உளநல வாரமானது இவ்வருடம் “தற்கொலை தடுப்பு” எனும் தொனிப்பொருளில் பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் போராதீவுப் பற்றுப் பிரதேச செயலகத்தினால் 07ம் திகதியில் இருந்து 10ம் திகதி வரை சர்வதேச உளநல வாரத்திற்குரிய நிகழ்வுகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான பிரதேச மட்ட உளநல சமூக சம்மேளனம் அங்குரார்ப்பண செயற்பாடு இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில் போராதீவுப் பற்று உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.புவனேந்திரன், வெல்லாவெளிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, வெல்லாவெளி பாடசாலை அதிபர், கிராம சேவை உத்தியோகத்தர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது பிரதேச ரீதியில் உளநல பிரச்சனைகள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் அவற்றைத் தீர்ப்பதற்கான செயற்திட்டங்கள் உருவாக்கப்பட்டு எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்