ஜம்பட்டா வீதியில் துப்பாக்கி பிரயோகம் இளைஞன் உயிரிழப்பு!

கொழும்பு – ஜம்பட்டா வீதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு(செவ்வாய்கிழமை) இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது காயமடைந்த இளைஞர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

24 வயதுடைய சூரியகாந்த் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்