கோட்டாவின் தேர்தல் பரப்புரை ஆரம்பம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் தேர்தல் பரப்புரைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதற்கமைய அவரது முதலாவது தேர்தல் பிரசார கூட்டம் அனுராதபுரம் சல்காடோ மைதானத்தில் இன்று(புதன்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

குறித்த பிரசார கூட்டத்தில் எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்கள் மற்றும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள், பங்கேற்கவுள்ளனர்.

அத்துடன், இதன்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் கோட்டாவுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, இன்றைய தேர்தல் பிரசார நடவடிக்கைகளினைத் தொடர்ந்து மஹிந்த அணியின் பிரசார நடவடிக்கைகள் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதற்கமைய தேர்தல் தொகுதி மட்டத்தில் 138 பரப்புரைக் கூட்டங்களும், 26 மாவட்ட மட்டத்திலான கூட்டங்களும் நடைபெறவுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த பிரசார கூட்டங்களில் கோட்டா, மஹிந்த உள்ளிட்ட பலரும் பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்