ஹட்டன்– கொழும்பு பிரதான வீதியில் நிலம் தாழிறக்கம்: தொடர்ந்தும் ஒருவழி போக்குவரத்து

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியினூடான போக்குவரத்து தொடர்ந்தும் ஒருவழி பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) பெய்த கடும் மழை காரணமாக வட்டவளை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் நிலம் தாழிறங்கியது.

இதனால் அப்பகுதியினூடான போக்குவரத்து நேற்று இரவு முதல் ஒருவழி போக்குவரத்தாக மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

பள்ளமான பகுதியில் வீதி கீழிறங்கியுள்ளதால் இந்த பாதையை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படும்படி பொலிஸார் அறிவுறுத்தியிருந்தனர்.

இந்த வீதியில் மேலும் பல இடங்களிலும் சிறிய மண்சரிவுகள் மற்றும் வெடிப்புகள் காணப்படுகின்றன.

இதன் காரணமாக குறித்த பகுதியினூடான போக்குவரத்துக்கள் தொடர்ந்தும் ஒருவழி போக்குவரத்தாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்