குருநகர் பகுதிக்கு முதல்வர் ஆனல்ட் நேரடிக் கள விஜயம்

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் வீதியோரங்களில் உள்ள வாய்க்கால்களினை மறித்து அதன் மீது கட்டப்பட்டிருக்கும் கட்டுமானங்களை அகற்றுவதற்கு யாழ் மாநகர முதல்வர் தலைமையிலான குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த பகுதிக்கு அண்மையில் நேரடி விஜயம் செய்த யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மாhனுவல் ஆனல்ட் அவர்களின் தலைமையிலான குழு குறித்த பகுதிகளில் பொது வடிகால்களின் மீது அமைக்கப்பட்டிருக்கும் கட்டுமானங்களினால் அப்பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய நேரடி விஜயம் செய்து குறித்த பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.

குறித்த நேரடி அவதானிப்பிற்கு அமைய பொது மக்களுக்கு இடையூராக உரிய அனுமதி இன்றி சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருக்கும் கட்டுமானங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

குறித்த நேரடி விஜயத்தில் யாழ் மாநகர பொறியியலாளர், தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் இணைந்திருந்தமை விசேட அம்சமாகும்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்