கோட்டாபய ராஜபக்சவிற்கு ஆதரவாக காரைதீவில் பட்டாசு கொழுத்தி கொண்டாட்டம்…

( தனுஜன் ஜெயராஜ் )

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவை ஆதரிக்கவுள்ளதாக சிறிலங்கா சுதந்திரக்கட்சி அறிவித்ததை தொடர்ந்து சுதந்திரக்கட்சி ஆதரவாளர்களால் நாட்டில் பல்வேறு இடங்களில் பட்டாசு கொழுத்தி தமது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் காரைதீவு பகுதியில் சுதந்திரக்கட்சியின் ஆதரவாளர்கள் பட்டாசு கொழுத்தி தமது ஆதரவினை கோட்டாபய ராஜபக்சவிற்கு தெரிவித்தனர்.

காரைதீவு பிரதான வீதி , காரைதீவு மத்திய வீதி போன்ற இடங்களில் ஆதரவாளர்களினால்
பட்டாசு கொழுத்தி தமது மகிழ்ச்சியை வெளிக்காடியதை அவதானிக்க முடிந்தது.

இக் கொண்டாட்டத்தினை சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் காரைதீவு பிரதேச அமைப்பாளரும் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளருமாகிய திரு. வீரக்கத்தி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் முன்னின்று நடாத்தியிருந்தார்.

இலங்கையின் 8ஆவது ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடாத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

படங்கள் – கிரிஷாந்த்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்