கோட்டாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துவிட்டு லண்டன் பறந்தார் சந்திரிகா! – குழப்பத்தில் அவரின் ஆதரவாளர்கள்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்க எதிர்ப்புத் தெரிவித்துவிட்டு லண்டன் சென்றுள்ளார் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசகரான முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க.

ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவை ஆதரிக்கும் முடிவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் பலர் எதிர்த்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் இயங்கும் சு.கவின் உறுப்பினர்களே இந்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

எந்தச் சந்தர்ப்பத்திலும் கோட்டாபயவுக்குத் தனது ஆதரவை வழங்கப்போவதில்லை எனத் தெரிவித்த சந்திரிகா லண்டன் சென்றுள்ள நிலையிலேயே கோட்டாபயவை ஆதரிக்கும் சு.கவின் தீர்மானத்தை அக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவர், பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சியின் பிரமுகர்கள் இன்று அறிவித்துள்ளனர்.

இது சந்திரிகா சார்பு சு.கவின் அமைப்பாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை, எதிர்கால நிலைப்பாடு எதையும் அறிவிக்காமல் சந்திரிகா லண்டன் சென்றுள்ளமையால் அவர்கள் குழப்பமும் அடைந்துள்ளனர.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்