சாய்ந்தமருதிலுள்ள அரச நிறுவனங்களுக்கு நிரந்தரக் காணிப்பத்திரங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு

சாய்ந்தமருது பிரதேசத்திற்குட்பட்ட அரச நிறுவனங்களுக்கு நிரந்தரக் காணிப்பத்திரங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

சாய்ந்தமருது பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் எம்.ஜே.ஏ.ஹஸ்மி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு காணிப்பத்திரங்களை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் பிரதேச செயலக கணக்காளர் ஏ.எல்.எம்.நஜிமுதீன், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜஃபர், உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.என்.ஏ.மலிக், பிரதேச செயலக பிரதம இலிகிதர்களான எம்.எம்.றசீட், எம்.எச்.எம்.ஹம்சார் உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், பிரதேச வைத்தியசாலை, வைத்தியசாலை வீதி உப தபாலகம், அல்-ஹிலால் வித்தியாலயம், அல்-ஜலால் வித்தியாலயம் மற்றும் அல்-கமறூன் வித்தியாலயம் உள்ளிட்ட மூன்று பாடசாலைகளுக்கும் காணிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்