சிறிலங்கா இனநாயகமயப்பட்டது என்பதனையே நீராவியடிப் பிள்ளையார் வளாக ஆக்கிரமிப்பு உணர்த்துகின்றது

தமிழர்களின் பண்பாட்டு வழிபாட்டு உரிமையினை புறந்தள்ளி, முல்லைத்தீவு- நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்துக்குள் பௌத்த பிக்குவின் உடலம் அத்துமீறி தகனம் செய்யப்பட்டையானது, சிறிலங்காவின் இனநாயக போக்கையே மீண்டும் வெளிப்படுத்தி நிற்கின்றது என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்கள் பொன்ராச புவலோஜன் , நுஜிதன் ராசேந்திரம் , டக்லஸ் அற்புதம் மென்டிசன் ,பிரேம்குமார் சந்திரகுமார் மற்றும் ஜீவராஜா அரியராஜா ஆகியோர் பிரித்தானியா பிரதமரிடம் மணு ஒன்று (06/10/2019) அன்று பிரதமரின் அலுவலகத்தில் மணு கையளிக்கப்பட்டது.

குறித்த மணுவில் ஆழவேர்விட்டுள்ள சிங்கள பௌத்த மேலாதிக்கத்தின் இனநாயக மனோபாவம் என்பது, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழர் தேசத்தை தனது அனைத்து கட்மைப்புக்களைக் கொண்டும் பௌத்த மயமாக்குகின்ற உத்திகளில் ஒன்றாகவே இச்சம்பவம் அமைவதோடு, சிறிலங்காவின் காவல்துறையினர் இந்த அத்துமீறலுக்கு உடந்தையாக இருந்துள்ளமையானது, அது இறுக்கமான சிங்கள இனவாத கட்டமைப்பு என்பதனையே வெளிக்காட்டி நிற்கின்றது.
தமிழர்கள் தமது உரிமைகளை வென்றடைய மக்கள் சக்தியாக அணிதிரண்டு , அதன் அரசியல் வலிமையின் ஊடாகத்தான் நீதியையும், அரசியல் இறைமையினையும் பெற்றுக் கொள்ள முடியும் என்பதனை இச்சம்பவம் மீண்டும் உணர்த்தியுள்ளது என்பதையும் குறித்த மணுவில் குறிப்பிட்டுள்ளனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்