சஜித் பிரேமதாசவின் முதல் தேர்தல் பரப்புரைக் கூட்டம் இன்று – சு.க.வின் முக்கியஸ்தர்கள் பங்கேற்கவுள்ளதாக தகவல்!

தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் முதல் தேர்தல் பரப்புரைக் கூட்டம் கொழும்பில் நடைபெறவுள்ளது.

காலி முகத்திடலில் இன்று(வியாழக்கிழமை) இந்த பரப்புரைக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

இதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர்.

அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலரும் மேடையேறுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

3 இலட்சத்துக்கும் அதிகமான ஆதரவாளர்கள் இந்த பேரணில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் அனைத்துத் தரப்புக்களும் தீவிரமான தேர்தல் பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கியிருக்கும் கோட்டாபய ராஜபக்ஷ நேற்று தனது தேர்தல் பிரசாரத்தை அனுராதபுரத்தில் ஆரம்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்