சஜித்துக்கு ரோஹித ஆதரவு

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநருமான ரோஹித போகொல்லாகம ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் ஐக்கிய தேசியக் கட்சியும் தத்தமது வேட்பாளருக்கான ஆதரவைத் திரட்டும் செயற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

அந்தவகையில் முக்கிய அரசியல்வாதிகள் தாங்கள் ஆதரவு வழங்கப்போகும் ஜனாதிபதி வேட்பாளரின் பெயரை அறிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் ரோஹித போகொல்லாகம, சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக இன்று தெரிவித்துள்ளார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்