மஹிந்தவை விமர்சித்த துமிந்த கோட்டாவுடன் இணைவு!

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துமிந்த திஸாநாயக்கவும் இன்று நேரில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவை ஆதரிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று முற்பகல் அறிவித்திருந்தது. இந்தநிலையில், இன்று நண்பகல் அநுராதபுரத்தில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகத்தில் துமிந்த திஸாநாயக்கவைச் சந்தித்துக் கலந்துரையாடினார் கோட்டாபய ராஜபக்ச.

சு.கவின் தீர்மானத்துக்கமைய ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவுக்குத் தான் ஆதரவு வழங்கவுள்ளதாக இந்தச் சந்திப்பின்போது துமிந்த திஸாநாயக்க உறுதியளித்தார்.

அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களின் வாக்குகளையும் கோட்டாபய ராஜபக்சவுக்குப் பெற்றுக்கொடுத்து அவரை அமோக வெற்றியடையச் செய்வதாகவும் துமிந்த திஸாநாயக்க இதன்போது மேலும் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரான எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவை துமிந்த திஸாநாயக்க கடந்த காலங்களில் கடுமையாக விமர்சித்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்