மட்டக்களப்பில் இன்று உலக உள நல தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நடைபவனி

மட்டக்களப்பு மாவட்ட செயலகம் ஜப்பசி 10 ம் திகதி உலக உளநல தினத்தையிட்டு ‘மாறிவரும் உலகில் இளைஞர்களக்கான உளநலம்’ எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு ஊர்வலம் இன்று வியாழக்கிழமை (10) மட்டு பஸ் நிலையத்தில் அரசாங்க அதிபர் மா. உதயகுமார் தலைமையில் இடம்பெற்றது

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் அரசாங்க அதிபர் மற்றும் உதவி அரசாங்க அதிபர் , மனநல வைத்தியர் கடம்பநாதன். , மாவட்ட செயலக அதிகாரிகள் , சுகாதார திணைக்க உத்தியோகத்தர்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள் , செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதிகள் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

மட்டக்களப்பு தனியர் பஸ்நிலயத்தில் காலை 10 மணிக்கு ஆரம்பித்த இந்த விழிப்புணர்வு ஊர்வலம் அங்கிருந்து மணிக்கூட்டு கோபுரம் வரை சென்று காந்தி பூங்காவை சென்றடைந்தது அங்கு விழிப்புணர்வு வீதி நாடகம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்சிகளும் இடம்பெற்றது

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்