M.C பஹார்டீன் அவர்கள் வணிகத்துறையில் கெளரவ கலாநிதி பட்டத்தை பெற்றுக்கொண்டார்.

டயசிஸ் ஒப் ஆசியா இந்தியா பல்கலைகழகத்தின் பட்டமளிப்பு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது. பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பலர் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வில்  இலங்கையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர்,சமூக சேவகர் ‘தேசமான்ய’
M.C பஹார்டீன் அவர்கள் வணிகத்துறையில் கெளரவ கலாநிதி பட்டத்தை பெற்றுக்கொண்டார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதியரசர் , கலாநிதி N.F.G.பொன்னுத்துரை   அவர்கள் டாக்டர் பட்டத்தை வழங்கி வைப்பதையும் நிகழ்வில் டாக்டர் பட்டம் பெற்ற  துறைசார் சாதனையாளர்களையும் படத்தில் காணலாம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்