ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச்சீட்டு அச்சிடும் பணி ஆரம்பம்

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் இன்று (வியாழக்கிழமை)  முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரசாங்க அச்சக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

குறித்த பணிகள் பொலிஸாரின் பாதுகாப்பின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அச்சக கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

35 வேட்பாளர்கள் போட்டியிடும் ஜனாதிபதித் தேர்தலின் வாக்குச்சீட்டு 26 அங்குல நீளமானதெனவும் அச்சக கூட்டுத்தாபனம்  சுட்டிக்காட்டியுள்ளது.

அந்தவகையில் ஒருகோடியே 60 இலட்சம் வாக்குச்சீட்டுக்கள் அச்சிடப்படவுள்ளதாகவும் கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்