மட்டக்களப்பில் கிளைமற் சிமாட் விவசாய திட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உலக வங்கியின் அனுசரனையுடன் உலக விவசாய திட்டத்தின் கீழ் கிளைமற் சிமாட் விவசாய திட்டத்திற்கு ஆயிரத்து 400 மில்லியன் அமெரிக்கன் டொலர்கள் ஓதுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் மா. உதயகுமார் தெரிவித்தார்.

உலக வங்கியின் கிளைமற் சிமாட் திட்டத்தின் பணிப்பாளர் எந்திரி எஸ்.மனோகரன் தலைமையிலான உலகவங்கி குழுவினர் இத்திட்டம் தொடர்பாக தெளிவு படுத்தும் கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றது.

இத்திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டம் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் இலங்கையில் 11 மாவட்டங்களும் இத்திட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் இதற்கான பிரதேச பிரிவாக ஏறாவூர் பற்று தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் சிறிய விவசாய அபிவிருத்தி திட்டமாக முந்தனை ஆறு பகுதியில் காணப்படுகின்ற பிரதேசங்களில் உள்ள நீர்ப்பாசன குளங்கள் புனரமைப்பது விவசாயத்தை உற்பத்தி செய்வதற்கு விவசாயிகளுக்கு உதவுதல் போன்றவை உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதற்கு உலக வங்கி ஆயிரத்து 200 மில்லியன் அமெரிக்க டொலரும் இலங்கை அரசு, பொதுமக்களின் நிதி உட்பட ஆயித்து 400 மில்லியன் டொலரில் இச் செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்போது மாகாண விவசாய உத்தியோகத்தர், கமநல திணைக்கள உத்தியோகத்தர், பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டதுடன் இத்திட்டம் 2019 இல் ஆரம்பிக்கப்பட்டு 5 வருடங்களில் நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்