தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரிப்பது குறித்து ஐ.தே.க- பங்காளிக் கட்சிகளுடன் கலந்துரையாடல்

ஐக்கிய தேசியக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரின் விஞ்ஞாபனத்தை தயாரிப்பது தொடர்பாக பங்காளிக் கட்சிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக ஐ.தே.க.வின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பான கலந்துரையாடல் எதிர்வரும் வாரம் நடைபெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தயாரிக்கப்படவுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் வட- கிழக்கு தமிழ் மக்களின் காணி பிரச்சினை மற்றும் இளைஞர் யுவதிகளின் பிரச்சினைகளுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்படுமெனவும் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் தங்களது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கான விஞ்ஞாபனத்தை சிறந்த முறையில் தயாரிப்பதற்கு ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்