கெசல் கமுவ ஓயா பெருக்கெடுப்பு – 30 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின

காசல்றீ நீர்த்தேக்கத்திற்கு நீரேந்திச் செல்லும் கெசல் கமுவ ஓயா பெருக்கெடுத்ததனால் 30 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

பொகவந்தலாவை கொட்டியாகல கீழ்ப்பிரிவில் பெய்த கடும் மழை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் குறித்த பகுதியில் உள்ள 5 மற்றும் 6 ஆம் இலக்க நெடுங்குடியிறுப்புகளே இவ்வாறு வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதன் காணமாக 30 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், அவர்களின் உடமைகளும் சேதமடைந்துள்ளன.

இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்கள், தோட்ட வைத்தியசாலையில் தற்காலிகமாக தங்கவைக்கபட்டுள்ளதுடன், தோட்ட நிர்வாகம் அவர்களுக்கான உலர் உணவுகளை வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்