கோட்டாவினால் சுதந்திரக்கட்சி பாதுகாக்கப்பட்டுள்ளது: மஹிந்த

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிப்பதாக எடுத்த தீர்மானத்தின் ஊடாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பாதுகாக்கப்பட்டுள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த சமரசிங்க மேலும் கூறியுள்ளதாவது, “அனைத்து மக்களுக்கும் ஏற்புடைய வகையில் நாட்டை கட்டியெழுப்ப வேண்டிய தேவைப்பாடு தற்போது உள்ளது.

மேலும் நாட்டின் இறைமையை பாதுகாத்து மக்களின் வாழ்க்கை மேன்மையடைய செய்ய கோட்டாபயவினால் மாத்திரமே முடியும். ஆகையாலேயே அவருக்கு ஆதரவினை வழங்கியுள்ளோம்.

மேலும் கோட்டாவுக்கு சுதந்திரக்கட்சி ஆதரவு தெரிவித்ததன் ஊடாக அதன் கொள்கைகளும் பாதுகாக்கப்பட்டுள்ளன.

அந்தகையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நாமே நிச்சயம் வெற்றி பெறுவோம்” என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்