கோட்டா குறித்து சுதந்திரக் கட்சியின் முடிவு கட்சியையே அழிக்கும் – குமார வெல்கம

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எடுத்துள்ள முடிவு, சுதந்திரக் கட்சியை அழித்து விடும் என அக்கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம எச்சரித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்கள் அதனைக் கைவிட்டாலும், நான் பொதுஜன பெரமுனவில் இணைந்துகொள்ளமாட்டேன்.

ஐக்கிய தேசியக் கட்சியுடனோ, பொதுஜன பெரமுனவுடனோ இணைந்துகொள்ளமாட்டேன். சுதந்திரமாக இருக்கவே எதிர்பார்க்கிறேன். தனியாக இந்த நிலைப்பாட்டை எடுக்கும்போது தனியாகவே பயணத்தை ஆரம்பிக்க வேண்டும்.

நான் எனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்குவதற்கு இரண்டு தலைப்பாம்பு அல்ல. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இந்த முடிவு சரியானது அல்ல. இது சுதந்திரக் கட்சியின் இருப்புக்கு தீங்கு விளைவிப்பதாக இருக்கும்.

தேர்தலில் பொதுஜன பெரமுன வெற்றி பெற்றால், சுதந்திரக் கட்சியினர் அந்தக் கட்சியில் இணைவார்கள். அதற்குப் பின்னர் சுதந்திரக் கட்சி இருக்காது” என்றும் அவர் கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்