வித்தியா கல்வி நிலையத்தில் சிறப்புற இடம்பெற்ற ஆசிரியர் நாள் நிகழ்வு, சத்தியலிங்கம் மற்றும் ரவிகரன் பங்கேற்பு.

முல்லைத்தீவு – தண்ணீரூற்று பகுதியில் அமைந்துள்ள வித்தியா கல்வி நிலையத்தில், 09.10.2019 நேற்றைய நாள் ஆசிரியர் நாள் நிகழ்வு மிகவும் சிறப்புற இடம்பெற்றது.

இந் நிகழ்வில் முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கல்வி நிலையத்தின் நிர்வாகி த.காண்டீபன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வானது, விருந்தினர் வரவேற்புடன் தொடங்கியது.

தொடர்ந்து மங்கல விளக்கேற்றல், கல்விநிலையத்தில் பயிலும் மாணவர்களது கலை நிகழ்வுகள், ஆசிரியர்கள் மற்றும் விருந்தினர்களது கருத்துரைகள் என்பனவும் இடம்பெறன.

அத்துடன் கல்விநிலையத்தில் கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் விருந்தினர்களும் நினைவுச் சின்னங்கள் வழங்கிவைக்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டதுடன், மாணவர்கள் சிலருக்கு கற்றல் கருவிகளும் வழங்கிவைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் விருந்தினர்களாக முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன், கரைதுறைப்பற்றுப் பிரதேசசபை உறுப்பினர் சி.லோகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும் இந் நிகழ்வில் கல்விநிலையத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள், மற்றும் மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்