அரச பொது ஊழியர் சங்க கிளிநொச்சி கிளை கூட்டம்

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் கிளிநொச்சி மாவட்டக் கிளை நிறைவேற்றுக் குழுவின் அங்குரார்ப்பணக் கூட்டம் எதிர்வரும் சனிக்கிழமை முற்பகல் 9 மணிக்கு கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத் தில் தாய்ச்சங்கத் தலைவர் எஸ். லோகநாதன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இக்கூட்டத்தில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவுவழங்குவது, இனப்பிரச்சினைக்கான அரசி யல் தீர்வு, வடக்கு – கிழக்கு இணைப்பை வலியுறுத்தல், கலைக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை உடன் நடத்தக் கோரல், வலிந்து காணாம லாக்கப்பட்டோர் தொடர்பான விடயங்க ளைத் தாமதமின்றி வெளிப்படுத்தல், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உரியவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட வுள்ளதாக எஸ்.லோகநாதன் தெரிவித்தார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்