சதித்திட்டங்கள் மேற்கொள்ளாமல் நேரடியான மோதலுக்கு வாருங்கள் – ஐ.தே.க.விற்கு மஹிந்த அணி சவால்!

ஐக்கிய தேசிய கட்சி முடியுமானால் சதித்திட்டங்கள் மேற்கொள்ளாமல் நேரடியான மோதலுக்கு முன்வரவேண்டும் என மஹிந்த அணி தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பொதுஜன பெரமுனவுடன் இணைந்துகொண்டதன் மூலம் கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றி உறுதியாகிவிட்டது.

பெரும்பான்மை வாக்குகளால் வெற்றிபெற வைப்பதற்கே தற்போது முயற்சிக்கின்றோம். அத்துடன் ஐக்கிய தேசிய கட்சி எப்போதும் பின் கதவினாலே ஆட்சிக்கு வந்திருக்கின்றது.

மக்களின் ஆதரவு யாருக்கு இருப்பதென்பதனை தேர்தலில் பார்த்துக்கொள்ளலாம்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்