எரிபொருட்களின் விலைகளில் மாற்றமில்லை!

எரிபொருட்களின் விலைகளில் இம்மாதம் மாற்றங்கள் ஏற்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 92 ஒக்டைன் பெற்றோல், 95 ஒக்டைன் பெற்றோல், சூப்பர் டீசல் மற்றும் ஒட்டோ டீசல் விலைகளில் எதுவித மாற்றங்களும் செய்யப்படவில்லை.

எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கமைவாக ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்