சமூக ஊடகங்களுக்கு மஹிந்த விசேட அறிவுரை!

ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள இந்த காலப்பகுதியில் வழங்கப்படும் ஊடக நிறுவனங்களுக்கான வழிகாட்டல் சமூக ஊடகங்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களைப் போன்று எதிர்வரும் தேர்தல்களின்போதும் அரச ஊடகங்கள் பக்கச்சார்பின்றி செயற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்தநிலையில் அரச ஊடகங்கள் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன என தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்