எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பம்!

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று(வெள்ளிக்கிழமை) காலை 7 மணி முதல் ஆரம்பமாகியுள்ளது.

47 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

53,384 பேர் இம்முறை வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்த பிரதேச சபைக்காக 28 அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

தொகுதி அடிப்படையில் 11 அங்கத்தவர்களும், விகிதாசார வாக்களிப்பிற்கு அமைவாக 17 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்னர்.

ஒரு வாக்களிப்பு நிலையத்தில் 5 முதல் 7 தேர்தல் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், இந்த நிலையங்களில் தலா 4 பொலிஸார் வீதம் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பிரதேச சபைத் தேர்தல் பாதுகாப்பு பணியில் 800 பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்