கடலில் மாயமான இளைஞன் சடலமாக கண்டெடுப்பு: மட்டு.இல் சம்பவம்

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளை கடற்பகுதியில்  காணாமல்போன இளைஞன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

குறித்த சடலம் கிரான்குளம் கடற்கரை பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) மாலை கரையொதுங்கியுள்ள நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

களுதாவளை வன்னியார் வீதியைச் சேர்ந்த 17 வயதுடைய சுந்தரலிங்கம் டிலான்ஷன் என்பவர் நேற்று முன்தினம் மாலை களுதாவளையைச் சேர்ந்த மேலும் 4 இளைஞர்களுடன் இணைந்து கடற்கரைக்கு குளிக்க சென்றுள்ளார்.

இவ்வாறு குளித்துக்கொண்டிருக்கும்போது அவர் கடலலையில் அள்ளுண்டுபோவதை சக நண்பர்கள் அவதானித்துள்ளனர்.

அதன்பின்னர் இந்த விடயம் தொடர்பாக அருகிலுள்ள கடற்படையினரிடம் அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த கடற்படையினர் மீனவர்களுடன் இணைந்து இளைஞனை தேடி வந்த நிலையில், இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிகுடி, காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்