மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயம்

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்காட்டில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் மாங்காடு சமுர்த்தி வங்கிக்கு முன்பாக இந்த விபத்து நேற்று (வியாழக்கிழமை) மாலை இடம்பெற்றது.

மோட்டார் சைக்கிளும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும் முச்சக்கர வண்டி சாரதியும் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்த இருவரும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் காயமடைந்தவர்கள் செட்டிபாளையம் மற்றும் மாங்காடு பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்