சம்பாந்துறையில் மண் அகழ்வு இடம்பெறும் இடங்கள் முற்றுகை

அம்பாறை- சம்பாந்துறை பகுதியில் சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வு இடம்பெறும் இடங்கள் முற்றுகையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், 2 கனரக வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  பல இடங்களில்  சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வில் ஈடுபடுவோரை கைது செய்யும் நடவடிக்கை கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எல்.சூரியபண்டார தலைமையின் கீழ் கடந்த புதன்கிழமை முதல் இடம்பெற்று வருகிறது.

இதன்போதே சட்டவிரோத மண் அகழ்வு இடங்கள்  நேற்று (வியாழக்கிழமை) முற்றுகையிடப்பட்டுள்ளன.

இதேவேளை சம்மாந்துறை, சவளகடை, கல்முனை பகுதிகளுக்குரிய  பிரதேச பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுடனான சந்திப்பொன்றை உதவி பொலிஸ் அத்தியட்சகர் எல்.சூரியபண்டார மேற்கொண்டதோடு இவ்வாறான சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் சட்டவிரோத மண் அகழ்வுகளினால் குறித்த பிரதேசத்திலுள்ள மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் குறித்தும், பிரதேச பாதுகாப்பு சம்மந்தமாகவும் கலந்துரையாடியதுடன்  எதிர்வரும் காலங்களில் சட்ட விரோத மண் அகழ்வு முற்றாக தடை செய்யப்பட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்