சரத் பொன்சேகாவிடம் பாரிய பொறுப்பை ஒப்படைக்கவுள்ள சஜித்!

தான் ஜனாதிபதியாக பதவியேற்கும் பட்சத்தில், 365 நாட்களும், 24 மணித்தியாலங்களும் சேவையாற்றுவதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பு – காலி முகத்திடலில் இன்று நடைபெற்ற முதலாவது தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தாம் உருவாக்குகின்ற புதிய இலங்கையில், கொள்ளை, ஊழல் மற்றும் மோசடி ஆகியவற்றுக்கு இடமளிக்கப் போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையிலேயே உருவாகிய மிக தூய்மையான அரசாங்கமாக இந்த அரசாங்கத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், அதற்கான அனைத்து பொறுப்புக்களையும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் ஒப்படைப்பதாகவும் சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார்.

பயங்கரவாதத்தை மாத்திரமன்றி, போதைப்பொருளையும் ஒழிக்கும் பாரிய பொறுப்பு சரத் பொன்சேகா வசம் காணப்படுவதாகவும் சஜித் பிரேமதாஸ இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதேவேளை சரத்பொன்சேகா மகிந்தவுடன் இணையயவுள்ளதாக அண்மைய சில தினங்களாக செய்திகள் பரவிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்