மட்டக்களப்பிலும் மாவீரர் மாலதியின் நினைவேந்தல் நிகழ்வு

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முதல் பெண் மாவீரர் மாலதியின் நினைவேந்தல் நிகழ்வு  மட்டக்களப்பிலும் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பெண் போராளியாகவிருந்து முதலாவது வீரமரணத்தை தழுவிக்கொண்ட மாலதியின் 32 ஆண்டு நினைவுத்தினம் நேற்று (வியாழக்கிழமை ) மட்டக்களப்பு- வெல்லாவெளியில் இடம்பெற்றது.

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் காரியாலயத்தில், அக்கட்சியின் மட்டு.அம்பாறை மாவட்ட பொறுப்பாளர் நா.நகுலேஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா, மற்றும், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் எஸ்.கோணஸ்வரன, மற்றும் அதன் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணித் தலைவர் எஸ்.கோகிலன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது ஈகைச் சுடரினை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏற்றி வைக்க, மலர் மாலையை எஸ்.கோணேஸ்வரன் அணிவித்தார்.

குறித்த நிகழ்வில் பங்குபற்றிய ஏனையோர் மலரஞ்சலி செலுத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்