வாய்மை விரித்தி செயலமர்வை முன்னிட்டு வவுனியா புதுக்குளம் பாடசாலைக்கு விஜியம் செய்த தீவகபகுதி அதிபர்கள்

கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் அதிபர்களின் வாய்மை விரித்தி செயலமர்வை முன்னிட்டு தீவக வலயபகுதி அதிபர்கள் வவுனியா புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயத்திற்கு இன்று (11) விஜியம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

வவுனியா மாவட்டத்தில் குறைந்த வளங்களுடன் மிகவும் முன்னுதாரணமாக செயற்பட்டு வரும் புதுக்குளம் பாடசாலை தரிசிப்பை தீவக வலயப்பகுதியிலிருந்து வந்த 50 அதிபர்கள் பார்வையிட்டிருந்தனர்.

இந்நிகழ்வானது பாடசாலையின் அதிபர் திருமதி. சொக்கலிங்கம் கமலாம்பிகை தலைமையில் நடைபெற்றது.
பாடசாலையின் ஆரம்ப பிரிவு கற்றல் வளநிலையம் மற்றும் நிர்வாக செயற்பாடுகள், கற்றல் கற்பித்தல், வகுப்பறை முகாமைத்துவம், சுற்றுச்சுழல், வளமுகாமைத்துவம் போன்ற விடயங்களை பார்வையிட்டிருந்தனர்.

நூலகம் மற்றும் மாணவர்களின் தலைமைத்துவப் பண்புகளை பார்வையிட்ட அதிபர்களுக்கு, மாணவர்கள் தங்கள் தனித்திறமைகளையும், குழுவாக தங்கள் திறமைகளையும் வெளிப்படுத்தியிருந்தனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்