அறுதிப்பெரும்பான்மையுடன் ராஜபக்ச அணி வசமானது எல்பிட்டிய பிரதேச சபை

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் 17 வட்டாரங்களிலும் வெற்றிபெற்று ஆட்சி அதிகாரத்தை ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கைப்பற்றியுள்ளது.

இதன்படி 23 ஆயிரத்து 372 வாக்குகளைப் பெற்று 17 ஆசனங்களை ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியும், 10 ஆயிரத்து 113 வாக்குகளைப் பெற்று 10 ஆசனங்களை ஐக்கிய தேசியக் கட்சியும் கைப்பற்றியுள்ளன.

அத்துடன், 5 ஆயிரத்து 273 வாக்குகளுடன் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 3 ஆசனங்களையும், 2 ஆயிரத்து 435 வாக்குகளுடன் ஜே.வி.பி. 2 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.

எல்பிட்டிய பிரதேச சபைக்கு உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கான வாக்களிப்பு இன்று மாலை 4 மணிக்கு நிறைவுக்கு வந்தது. பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளர்களில் 72 -75  சதவீதமானோர் வாக்குரிமையைப் பயன்படுத்தினர்.

காலி மாவட்டத்திலுள்ள எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் இன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரை நடைபெற்றது.

28 உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்காக 53 ஆயிரத்து 384 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.

ஐந்து கட்சிகளின் சார்பில் 155 பேர் களமிறங்கிய நிலையில் இவர்களிலிருந்து தொகுதி அடிப்படையில் 17 உறுப்பினர்களும், விகிதாசார அடிப்படையில் 11 பேருமாக மொத்தம் 28 பேர் சபைக்குத்  தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்