பச்சிலைப்பள்ளியில் வறுமை நிலையில் உள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்

பளை பிரதேசத்தில் வறுமையில் கல்வியை தொடர கஷ்டப்படும்   மாணவர்களுக்கு அரியாலையை வதிவிடமாக கொண்ட அமரர் தாருஷாவின் ஓராம் ஆண்டு நினைவாக அவரது உறவினரான சுவிஸ் வாழ் தனபாலசிங்கம்-நித்தியகரன்(வவி) அவர்கள்   கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார்.
பச்சிலைப்பள்ளி பிரதேசத்தின் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு குறித்த உதவி வழங்கப்பட்டது. இன்று மாலை ஐந்து மணிக்கு  இலங்கை தமிழரசுக்கட்சியின் பச்சிலைப்பள்ளி பிரதேச காரியாலயமான தாயகத்தில் குறித்த நிகழ்வு பச்சிலைப்பள்ளி பிரதேச சபை உப தவிசாளர் கயன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் உறுப்பினர்களான ரமேஷ் கோகுல்ராஜ் வீரவாகுதேவர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் ஞானம் கவிஞர் பிரியன் என பலரும் கலந்து கொண்டனர்
இந்நிகழ்வை ஒழுங்குபடுத்திய உரும்பையூர் திலக் அவர்கள் ஒழுங்குபடுத்தியிருந்தார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்