நாட்டை வந்தடைந்தார் கோட்டாபய!

சிங்கப்பூருக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளார்.

அவரின் வைத்திய சிகிச்சைகள் நிறைவடைந்தமையினால், இன்று (சனிக்கிழமை) காலை நாட்டை வந்தடைந்துள்ளார்.

கடந்த 9 ஆம் திகதி முதல் இன்று வரை சிங்கப்பூர் செல்ல கோட்டாபய ராஜபக்ஷவுக்கு விசேட மேல் நீதிமன்றம் கடந்த 3 ஆம் திகதி அனுமதி வழங்கியிருந்தது.

அதனடிப்படையிலேயே கோட்டாபய சிங்கப்பூருக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

மேலும் நாடு திரும்பியதன் பின்னர் வௌிநாட்டு கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சம்பத் அபேகோன், சம்பத் விஜேரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதியரசர்கள் கொண்ட நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்