கனடா ரொரன்டோ K2B டான்ஸ் ஸ்ரூடியோ போரால் பாதிக்கப்பட்ட மாணவருக்கு உதவி!

கனடா ரொரன்டோ K2B டான்ஸ் ஸ்ரூடியோவினர்ர்களால், அவர்களின் வருடாந்த நிகழ்ச்சியான “டி – நைட் 2019” இன் லாபத்தின் ஒரு பகுதி போரில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கல்விக்கு வழங்கப்பட்டுள்ளது.

K2B டான்ஸ் ஸ்ரூடியோ, 50 குழந்தைகளுக்கு 3600 ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்களும். போரின் போது தந்தையை இழந்த மூன்று குழந்தைகளுக்கு தலா 50 ஆயிரம் ரூபா நன்கொடையை வங்கியில் வைப்புச் செய்துள்ளனர்.

600 டொலர்களை இந்த செயற்றிட்டத்துக்கு வழங்கிய அபி அமல் மற்றும் அரவிந்த் ரத்னசிங்கம் ஆகியோருக்கும் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தது புன்னகை அறக்கட்டளை. குறுகிய காலத்தில் இதை சாத்தியமாக்கிய முல்லைதீவு ஒருங்கிணைப்பாளர் ரவி ஆகியோருக்கும் K2B டான்ஸ் ஸ்ரூடியோவினர் நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான மாபெரும் செயற்றிட்டத்தை போரால் பாதிக்கப்பட்ட பிரதேச மாணவர்களுக்கு வழங்கியமைக்காக K2B டான்ஸ் ஸ்ரூடியோ அமைப்பினருக்கும், நட்பும் தயையும் கொடையும் பிறவிக்குணம் என்று ஒளவையார் குறிப்பிட்டதற்கமைவாக பிறப்பிலேயே தாகதர்மத்துடன் மனமுவந்து பொருள்களையும் பணத்தையும் வழங்கியுதவிய நல்லுள்ளங்களுக்கும் ஒழுக்கமைப்புச் செய்தவர்களுக்கும் தமிழ் சி.என்.என். குடும்பமும் தனது பாராட்டுக்களைத் தெரிவிக்கின்றது.

இது அவர்களின் முதற்செயற்றிட்டம். தொடர்ந்தும் இவர்களின் பணிகள் சிறக்க கனடா வாழ் தமிழ் மக்கள் அனைவரும் தமது பூரண ஆதரவை வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்