ரெலோ, புளொட் தங்களையே ஆதரிக்கும்: மக்கள் விடுதலை முன்னணி

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளான ரெலோ, புளொட் ஆகியன தங்களையே ஆதரிக்குமென மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

வடக்கு- கிழக்கை சேர்ந்த அரசியல்வாதிகள் யாருக்கு ஆதரவு வழங்கவுள்ளார்கள் என்பது குறித்து கருத்து தெரிவிக்கும்போது அக்கட்சி இவ்வாறு தெரிவித்துள்ளது. மேலும் கூறியுள்ளதாவது, ‘தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர், தமக்கு  ஆதரவை வழங்குவதாக குறிப்பிட்டுள்ளனர்.

அந்தவகையில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோ, புளொட் ஆகிய இரு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியிருந்தோம்.

எனவே, அந்த கட்சிகளும் தங்களுக்கே ஆதரவை வழங்குமென எதிர்பார்க்கின்றோம். மேலும், எமது கொள்கைகளை அக்கட்சிகள் ஏற்றுள்ளன” என மக்கள் விடுதலை முன்னணி குறிப்பிட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்