மீசாலை விக்கினேஸ்வர மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் தின விழா

யா/மீசாலை விக்கினேஸ்வர மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் தின விழா வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது.
வித்தியாலய முதல்வர் சு.சிவானந்தன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், முதன்மை விருந்தினராக தென்மராட்சி கல்வி வலயத்தின்  முன்னைநாள் கணித மூலவள நிலைய இணைப்பாளர் சி.பத்மநாதன், சிறப்பு விருந்தினர்களாக தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக தொலைக்கல்விப்பிரிவு சிரேஷ்ட விரிவுரையாளரும், பாடசாலையின் பழைய மாணவர் சங்க செயலாளருமான க.ரஜனிகாந்தன், பிரான்ஸ் –  ஆசிரியர்  பழைய மாணவர் சங்க உறுப்பினரான சு.சுதர்சன், பழைய மாணவர் சங்க ஆலோசகர் மா.மகேந்திரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வில் ஆசிரியர்கள் கெளரவிக்கப்பட்டதோடு, மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்பு உதவிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்