தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கோத்தபாய ராஜபக்ஷ ஆதரிப்பது என தீர்மானம்

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்பு, நிலம் நிர்வாகம் பொருளாதாரம் தமிழர்கள் ஒடுக்கப்பட்டு வரும் என்ற நிலைமையில் கிழக்கு மாகாணத்தை கட்டிக்காக்க வேண்டிய ,மீட்க வேண்டிய பொறுப்பு மிக்க அரசியல் கட்சி என்ற வகையில் கிழக்கு மாகாணத்தில் மக்கள் நலன் சார்ந்து தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆதரிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் பூ,பிரசாந்தன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு  வாவிக்கரை வீதியிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி காரியாலயத்தில் இன்று சனிக்கிழமை (12) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் இவ்வாறு கட்சியின் செயலாளர் பூ,பிரசாந்தன் தெரிவித்தார்
கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்பு , நிலம் நிர்வாகம் பொருளாதாரம்  நிர்வாகம் ஒடுக்கப்பட்டு வருகின்ற நிலைமையில் கிழக்கு மாகாணத்தை கட்டிக்காக்க வேண்டிய தமிழர்களின் இருப்பை பாதுகாக்க வேண்டிய   மீட்கவேண்டிய  பொறுப்பு மிக்க அரசியல் கட்சி என்ற வகையில் கிழக்கு மாகாணத்தில் மக்கள் நலன் சார்ந்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினால்
இன்று இடம்பெற்ற கட்சியின் தலைவர் பணிக்குழு செயற்குழு மற்றும் பொதுச் சபைக் கூட்டத்தின் அடிப்படையில் கட்சியின் தொண்டர்கள் ஆளும் கட்சியின் தலைமை நடைபெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவை  ஆதரிப்பது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது
கட்சியினால்  மக்களின் வலுவாக்கம். அபிவிருத்தி கல்வி கலை கலாச்சார பொருளாதார ரீதியான தயாரிக்கப்பட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் இணைத்துக் கொள்வதற்கு தேவையான உடன்படிக்கை இன்றைய தினம் கைச்சாத்திடப்பட்டு  நாங்கள் அவகளுடன்  பேசி வந்த அடிப்படையில் எதிர்வரும் காலங்களில் அதற்கான உடன்படிக்கை கைச்சாதிட உள்ளோம்
ஜனாதிபதி வேட்பாளர் வெளிநாட்டிற்கு சென்ற காரணத்தினால் உடன்படிக்கை செய்ய முடியாமல் உள்ளது இருந்தாலும் அவர்களுடன் பேசிய அடிப்படையில் அவர்கள் ஒரு இனக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர்.  கிழக்கு மாகாணத்தின் மாகாண சபை ஒட்டுமொத்தமாக இருக்கிற மாகாணசபை அதிகாரங்களை முழுமையாக வழங்க வேண்டும்.
அதே போன்று கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற மக்கள் போராட்டத்தால் பாதிக்கப்பட்டு இருக்கின்ற போராளிகள் யுத்தத்தால் கணவனை இழந்த பெண் தலைமைத்துவ குடும்பங்கள். சீரழிந்து இருக்கின்ற கல்வி கலை கலாசார பொருளாதார நில ஆக்கிரமிப்பு தொடர்பான அனைத்து விடயங்களிலும் உடன்பாட்டின் அடிப்படையில் கிழக்கு மாகாண மக்களின் நன்மைகருதி  இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது.
2008 முதல் 2012 வரை இதே மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தோடு  இனக்கப்பாடு செய்திருந்தோம் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் மாகாண சபை ஆட்சியை தமிழர் விடுதலைப் புலிகள் கட்சி செய்துகாட்டி இருந்தது  அந்த வேளையில் அதன் அடிப்படையில் ஒட்டுமொத்தமாக முடிந்த அளவிற்கு ஒரு இன ஒற்றுமையை மேற்கொண்டு அபிவிருத்தி பணிகளை செய்திருந்தோம்
அந்த அடிப்படையில் நாட்டின் ஜனாதிபதி கிழக்கு மாகாணத்தைப் பற்றி சிந்திக்கவேண்டும். குpழக்கு மாகாணத்திலுள்ள பிரச்சனைகளை தீர்க்க கூடியதாக இருக்கவேண்டும். அதைவிடுத்து  வெறுமனே நான்கு வருடம் நல்லாட்சி என்ற போர்வையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அதனுடன்  இனைத்து கட்சிகளும் கொண்டுவந்த நல்லாட்சியும் ஐக்கிய தேசிய கட்சி அரசும் இதுவரையில் கிழக்கு மாத்திரமல்ல ஒட்டுமொத்த தமிழர்களின் பிரச்சினைக்கு ஏதாவது தீர்வுகண்டிருக்கின்றதா? அது கேள்வி குறியாய் இருக்கிறது
அவர்கள் தேர்தல் காலத்தில்  கொடுத்த வாக்குறுதி நிரந்தர தீர்வு அதனை பெற்றுக்கொடுக்க முடியவில்லை ஒட்டுமொத்தமாக கிழக்கு மாகாணத்தை சீரழித்துள்ளார்களே தவிர வேறு ஒன்றும் இல்லை கிரான் பிரதேசத்தின் அபிவிருத்தி குழு தலைவராக 99.99 வீதம் தமிழர்கள் இருக்கும் இங்கு அபிவிருத்தி குழு தலைவராக ஓட்டுமாவடியைச் சோர்ந்தவர்களை நியமித்துள்ளனர்.
ஆகவே அடிப்படை நிர்வாகத்தை கூட தமிழர் அடைக் கூடாது என’பதற்காக அடுத்து கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்த கோரிக்கை 29 வருடங்களாக முன்வைக்கப்பட்டுள்ளது அதனை கரிஸ் எம்.பியிடம் சென்று கேட்டுவாருங்கள் என்று செல்லுமளவிற்கு நிர்வாகம் இருக்கின்றது என்றால் அதற்கு மாற்றீடாக மகிந்த ராஜபஷ; கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற ஒவ்வொரு தமிழனும் தலைநிமிர்ந்து வாழவைத்தவர்; முதலமைச்சர் சந்திரகாந்தன்  என்பதை அறியவேண்டும்
ஏங்களுடைய நோக்கம் கிழக்கு மாகாண ஒவ்வொரு தமிழனும் தவைநிமிர்ந்து வாழதேமிழர்கனே கிழக்கு மாகாணத்தை ஆளக்கூடிய சூழல் உருவாகவேண்டும் எனபது தான் எமது நோக்கம் எனவே மக்கள் விரும்பினால் நாங்கள்  ஆட்சிகளை பஜடித்து அதிகாரங்களை பெற்று சேவை செய்வோம் தலைவர் சந்திரகாந்தல் 4 வருடங்களாக சிறைப்படுத்தப்பட்டபோதும் நாங்கள் ஓடி ஒழியாது எமது அடிமட்ட தொண்டர்கள் கூட கிழக்கு மாகாண தமிழர்களை பாதுகாப்பதற்காக குரல்கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.
கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற தமிழர்களை பாதுகாக்க வேண்டுமாக இருந்தால் மக்களின் அனைத்து அரசியல் கட்சிகளும் கிழக்கு மக்களின் அனைத்து அமைப்புகளும் கிழக்கு மாகாணத்தில் மக்களின் அனைத்து புத்திஜீவிகள் நாங்கள் ஒன்றாக பயணிப்போம். அதேவேளை கிழக்கிற்கு தலைமை தாங்க கூடிய ஒரே ஒருவர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சந்திரகாந்தன் தான் என்றார்  .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்