மரம் முறிந்து விழுந்ததில் பெண் உட்பட மூவர் உயிரிழப்பு!

வெலிமடை பகுதியில் உள்ள வீடொன்றில் மரம் முறிந்து விழுந்ததில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

வெலிமடை பிரதேச சபைக்கு அருகில் உள்ள தற்காலிக வீட்டில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

இந்த அனர்த்தத்தில் பெண் ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10, 14, 18 வயதுடையவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்