புத்தளத்தில் வடமாகாண பாடசாலைகள் 6 வடமேல் மாகாணத்திடம்! சாள்ஸ்

புத்தளம் மாவட்டத்தில் இயங்கி வரும் ஆறு பாடசாலைகளையும் வடமாகாண கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், வடமேல் மாகாண ஆளுநர் பேசல ஜயரத்ன பண்டாரவிடம் கையளித்துள்ளார்.

இந்த நிகழ்வு ஆளுநர் செயலகத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.

மன்னார் வலயத்தை சேர்ந்த மன்/புத் றிஸ்வான் GMMS ,மன்/புத் /ஆப்தீன் GMMS, மன் /புத் / அன்சரி GMMS, மன்/புத் / ஹஸ்பன் GMMS,மன்/புத் / அயூப் GMMS, மன் /புத் /ரிஷாத் பதியுதீன் மகாவித்தியாலயம் ஆகிய ஆறு பாடசாலைகளும் தற்போது புத்தளத்தில் இயங்கிக்கொண்டிருக்கின்றன. இப்பாடசாலைகளில் மொத்தமாக 2386 மாணவர்களும் 167 ஆசிரியர்களும் தற்போது கடமை புரிந்து வருகின்றனர்.

1990ம் ஆண்டிற்கு பிற்பட்ட காலப்பகுதியில் இருந்து புத்தளத்தில் இயங்கி வரும் இப்பாடசாலைகள் மன்னார் கல்வி வலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் பல்கலைகழக அனுமதி விகிதாசாரத்தில் அதிகம் பாதித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் பல தடவைகள் வடமாகாண சபை கல்வி அமைச்சு முதல் இலங்கை கல்வி அமைச்சு வரை இதற்கான சிறந்த தீர்வினை தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் வடமாகாண ஆளுநரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இணைங்க குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்