பல்துறை சார்ந்தோருக்கான திறமைக்கான தேடல் விருது விழா – 2019…

லக்ஸ்டோ ஊடக வலையமைப்பின் 25வது வருட பூர்த்தியை முன்னிட்டு ஊடகப் பயிற்சிப் பட்டறையை நிறைவு செய்த 500 மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் , பல்துறை சார்ந்தோருக்கான திறமைக்கான தேடல் விருது வழங்கும் நிகழ்வும் சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் 2019/10/12ம் திகதி சனிக்கிழமை முற்பகல் 9மணியளவில் இடம்பெற்றது.
இன் நிகழ்வு லக்ஸ்டோ ஊடக வலையமைப்பின் தவிசாளர் கலைஞர் AL. அன்சார் மற்றும் ஆர்.கே. ஊடகவலையமைப்பின் தவிசாளர் ராஜகவி றாகில் அவர்களின் தலைமையில் சிரேஷ்ட அறிவிப்பாளர் இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபனம் பிறை வானொலி நிலையக் கட்டுப்பாட்டாளர் வசீர் அப்துல் கையூம் அவர்களின் நெறிப்படுத்தளில் இடம்பெற்றது…

இன் நிகழ்வின் முதன்மை அதிதிகளாக ஐக்கிய தேசியக் கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளர் சிரேஷ்ட சட்டத்தரணி கெளரவ MS.அப்துல் றஸ்ஸாக் அவர்கள் , முன்னாள் உயர்கல்விப் பிரதி அமைச்சர் கெளரவ MM.மயோன் முஸ்தபா அவர்கள் , முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தற்போதைய சம்மாந்துறை பிரதேச சபையின் கெளரவ உறுப்பினருமான ILA.மாஹீர் அவர்கள், தொழில் அதிபர் சிராஸ் யூனுஸ் அவர்கள் , சிரேஷ்ட ஊடகவியலாளர் சகா தேவராஜா அவர்கள், சட்டத்தரணி MIM.ஜிப்ரி அவர்கள் , உலமாக்கள் , ஊடகவியலாளர்கள் , கல்விமான்கள் , புத்திஜீவிகள் , விருது பெறுவதற்காக வருகை தந்த கலைஞர்கள் , லக்ஸ்டோ ஊடக வலையமைப்பின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்…

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்