கோட்டாபய- ஹிஸ்புல்லா விவகாரம் குறித்து நாமல் கருத்து

தேர்தல் சட்டங்கள் மீறும் வகையிலான உடன்பாடுகளை ஏற்படுத்த வேண்டிய தேவை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு கிடையாதென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா பெற்றுக்கொள்ளும் வாக்குகள், கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைக்கும் வாக்குகளாகுமென எஸ்.பீ.திஸாநாயக்க  அண்மையில் ஊடகங்களில் தெரிவித்திருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே நாமல் ராஜபக்ஷ, தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் இடையில் எந்தவித உடன்பாடும் இல்லையெனவும் நாமல் கூறியுள்ளார்.

மேலும் பொதுஜன பெரமுன மக்களின் ஆதரவினை பெற்று சிறந்த முறையில் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவோமெனவும் நாமல் ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்