மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யக்கூடிய பயணத்தை ஆரம்பிப்போம்- அஜித் பி பெரேரா

எல்பிட்டிய தேர்தலின் ஊடாக மக்கள் கூற முற்பட்ட செய்தியை நாம் புரிந்துக்கொண்டுள்ளோமென அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

ஆகையால் அவர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் பதிய பயணத்தை  தற்போது முன்னெடுக்க உள்ளோமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அஜித் பி பெரேரா மேலும் கூறியுள்ளதாவது, “எல்பிட்டிய தேர்தல் முடிவுகளை நாம் ஏற்றுக்கொள்கிறோம்.

இதன் ஊடாக மக்கள் கூற முற்பட்ட செய்தியையும் நாம் புரிந்துக்கொண்டுள்ளோம். இந்தக் குறைகளை நிவர்த்தி செய்து பயணிக்க வேண்டும் என்பதுதான் எமது குறிக்கோளாகும்.

ஆனால், எல்பிட்டிய போன்று, இந்த நாட்டில் 330 தொகுதிகள் காணப்படுகின்றன. எல்பிட்டிய என்பது இதில் ஒன்றாகும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துக் கொண்டு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டாலும், சுதந்திரக் கட்சியின் பிரதேசசபை உறுப்பினர்கள் என்றும் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

எனவே, இந்த வெற்றி ஜனாதிபதித் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாது” என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்